Monday 7 October 2013

தொடரும்..

images

உறவுகளுடன் பயணிக்க தெரியாதவர்கள்
இருக்கும் வரை
பிரிவும் அதன் வலியும் தொடரும்
#####
#
வலியை மறைப்பவர்கள்
இருக்கும் வரை
நாடகங்களும் பொய் சிரிப்பும் தொடரும்
#####
#
காய்ந்த சருகுகள்
விழும் வரை
வசந்தம் வருவது தொடரும்
#####
#
தொடர்வது தொடர்ந்துக்கொண்டே
இருக்கும் வரை
முடிவு என்பது எதோ ஒரு
ஓரத்தில் மறைந்து இருக்கும்
#####
#
முடிவை நோக்கி பயணிக்கும்
மனித நெஞ்சங்களுக்கு
தொடர்கின்ற உறவுகளும்
ஒரு சுமை தான்
#####
#

—————————– Sugan